புத்ததேப் பட்டாச்சார்யாவைத் தொடர்ந்து வங்காள பின்னணி பாடகி சந்தியா முகர்ஜியும் தமக்கு அளிக்கப்பட்ட பத்மஸ்ரீ விருதை ஏற்க மறுத்துள்ளார்.
90 வயதான தமக்கு விருது வழங்குவது தம்மை அவமதிப்பது போல் இருப்பதாக சந்தியா முகர்ஜி கூறியதாக அவருடைய மகள் சவுமி சென் குப்தா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
வங்காள இசை உலகில் புகழ் பெற்ற சந்தியா முகர்ஜி இந்த விருதை நிராகரிப்பதில் எந்தவித அரசியல் பின்புலமும் இல்லை என்றும் காலம் கடந்து சாதனை படைத்த கலைஞர்களை கௌரவிப்பதை எதிர்க்கவே இந்த விருதை பெறமறுப்பதாகவும் சந்தியா முகர்ஜி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.