Klien Vision நிறுவனத்தின் Aircar எனும் பறக்கும் காருக்கு ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஸ்லோவாகியாவின் விமான போக்குவரத்து ஆணையம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
சாலையில் செல்லும் போது சாதாரண காராகவும், இறக்கையை விரித்தால் மூன்றே நிமிடங்களில் விமானமாகவும் இரண்டு பேர் பயணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த வாகனம், EASA எனப்படும் ஐரோப்பிய விமான போக்குவரத்து பாதுகாப்பு நிறுவனத்தின் சோதனைகளில் வெற்றி பெற்றுள்ளது.
70 மணி நேரத்திற்கும் மேலான பறக்கும் சோதனை மற்றும் 200 தரை இறங்குதல் மற்றும் டேக் ஆஃப் சோதனைகளை இந்த வாகனம் வெற்றிகரமாக பூர்த்தி செய்துள்ளது.
1000 கிலோ எடை கொண்ட இந்த வாகனத்தில் 15 கிலோவாட் மின்சார என்ஜின் பொருத்தப்பட்டுள்ளதுடன், 1.6 லிட்டர் சாதாரண பிஎம்டபிள்யூ எஞ்சினும் பொருத்தப்பட்டு உள்ளது.
இந்நிறுவனம் புதிதாக வடிவமைத்து வரும் பறக்கும் கார், மணிக்கு 300 கிலோ மீட்டர் வேகத்தில் ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் வரை செல்லக்கூடியது எனவும் தெரிவித்துள்ளது.