அரசு நிதியில் இருந்து பகுத்தறிவுக்கு பொருந்தாத இலவசங்களை அறிவிக்கும் அரசியல் கட்சிகளின் சின்னத்தை முடக்கவும், அதன் பதிவை ரத்து செய்யவும் உரிய நடவடிக்கை எடுப்பது தொடர்பாக, மத்திய அரசுக்கும், தேர்தல் ஆணையத்திற்கும் உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
வழக்கறிஞர் அஸ்வினி குமார் உபாத்யாய் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், அரசியலமைப்பு சட்டத்தை மீறி வாக்காளர்களின் ஆதரவைப் பெற, அரசியல் கட்சிகளின் இதுபோன்ற நடவடிக்கைகளை தடை செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்.
மேலும், இது அரசின் செலவில் வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுக்கும் செயல் என்றும், இது ஜனநாயகத்தின் உயிரோட்டத்தை பாதிப்பதாகவும், மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதன் மீதான இன்றைய விசாரணையில், 4 வாரங்களில் பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கும், தேர்தல் ஆணையத்திற்கும் உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.