பல ஆண்டுகளாக நீடித்து வரும் உள்நாட்டுப் போரால் நிலைகுலைந்து போயுள்ள லிபியாவில் செல்லப்பிராணிகளுக்கென புதிய மருத்துவமனை திறக்கப்பட்டுள்ளது.
கிழக்கு லிபியாவின் பெங்காசி நகரில் திறக்கப்பட்டுள்ள இந்த புதிய மருத்துவமனைக்கு பூனை, நாய், குதிரை, புலி உள்ளிட்ட விலங்குகள் சிகிச்சைக்காக அழைத்து வரப்படுகின்றன.
போரினால் பெங்காசி நகரின் பல மருத்துவமனைகள் தீவிரவாதிகளின் புகலிடமாக மாறி உள்ள நிலையில், நோய்வாய்ப்பட்ட மனிதர்களுக்கு சிகிச்சை அளிப்பதே பெரும் சவாலாக உள்ளது.