குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் கட்டப்பட்டுள்ள சுரங்கப்பாலத்திற்கு மறைந்த முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
முன்னதாக இந்த பாலத்திற்கு தகுந்த பெயரை தெரிவிக்கும்படி குஜராத் முதலமைச்சரை ராஜ்கோட் மேயர் பிரதீப் தேவ் கேட்டுக் கொண்டிருந்தார். இந்த சூழலில் புதிய சுரங்க பாலத்தை காணொலி வாயிலாக நேற்று திறந்து வைத்த முதலமைச்சர் பூபேந்திர பட்டேல், பிபின் ராவத்தை கவுரவிக்கும் விதமாக அந்தப் பாலத்துக்கு அவரது பெயரை சூட்டுவதாக அறிவித்தார்.
இந்தியாவின் முதலாவது முப்படை தலைமை தளபதியான பிபின் ராவத், கடந்த மாதம் 8ந்தேதி குன்னூர் அருகே நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார்.