அவதூறு வழக்கில் கேரளா முன்னாள் முதலமைச்சர் அச்சுதானந்தன் 10லட்சம் ரூபாய் இழப்பீடாக செலுத்த வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கேரளாவில், 'சோலார் பேனல்' எனப்படும், சூரிய ஒளி மின் தகடு அமைப்பதற்கான உரிமம் பெற்றுத் தருவதாக கூறி, பண மோசடி செய்ததாக, சரிதா நாயர் என்பவர் கைது செய்யப்பட்டார். இது குறித்து எதிர்கட்சி தலைவராக இருந்த அச்சுதானந்தன், மலையாள செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில், அப்போதைய முதலமைச்சர் உம்மன் சாண்டிக்கு இந்த முறைகேட்டில் தொடர்பு உள்ளது என்று அவதூறாக பேசியதாக 2014 ஆம் ஆண்டில் வழக்கு தொடரப்பட்டது.
திருவனந்தபுரம் முதன்மை நீதிமன்றத்தில் உம்மன் சாண்டி தொடர்ந்த வழக்கினை விசாரித்த நீதிபதி, அச்சுதானந்தன் 10 லட்சத்து 10ஆயிரம் ரூபாய் இழப்பீடாக செலுத்த வேண்டும் என்று தீர்ப்பளித்தார்.