மெட்ரோ நகரங்களில் அதிகரித்துவரும் ஒமைக்ரான் வைரஸ், வரும் வாரங்களில் சிறு , குறு நகரங்கள் மற்றும் கிராமங்களில் பரவ வாய்ப்பிருப்பதாக கேரளாவின் கொச்சி இந்திய மருத்துவக் கழகத்தின் கோவிட் தடுப்பு பணிக் குழு தலைவர் டாக்டர் ராஜீவ் ஜெயதேவன் எச்சரித்துள்ளார்.
முதலில் மெட்ரோ நகரங்களில் தொடங்கும் கொரோனா அலை, சில வாரங்களில் கிராமங்களுக்கு பரவுவது உலக அளவில் காணப்படும் தன்மை என தெரிவித்த அவர், பீட்டா, டெல்டா, ஒமைக்ரான் என எந்த உருமாற்றம் பெற்ற கொரோனா வைரஸும் மிகுதியான வீரியம் பெரும் அளவுக்கு உயிர் வாழ்ந்தது இல்லை என தெரிவித்தார்.
எனவே டெல்டா மற்றும் ஒமைக்ரான் வகை கொரோனா தொற்று நீண்ட நாட்கள் இருப்பதற்கான வாய்ப்பு குறைவு என டாக்டர் ராஜீவ் ஜெயதேவன் தெரிவித்துள்ளார்.