மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் நண்பகலில் ஆயிரத்து நூறு புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சியடைந்தது.
இந்தியாவில் கொரோனா தொற்றுப் பரவல் அதிகரித்துள்ளதன் எதிரொலியாகக் கடந்த வாரத்தில் பங்குச்சந்தையில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டது. இன்றைய வணிகநேரத் தொடக்கம் முதலே பங்குச்சந்தையில் சரிவு ஏற்பட்டது.
நண்பகலில் மும்பை பங்குச்சந்தைப் பங்குவிலைக் குறியீடு சென்செக்ஸ் 1106 புள்ளிகள் சரிந்து 57 ஆயிரத்து 931 ஆக இருந்தது. தேசியப் பங்குச்சந்தைப் பங்குவிலைக் குறியீடு நிப்டி 337 புள்ளிகள் சரிந்து 17 ஆயிரத்து 20 ஆக இருந்தது. உலோகத் தொழில் நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் பங்குவிலை ஐந்து விழுக்காடு வரை வீழ்ச்சியடைந்தது.