ஜம்மு காஷ்மீரில் பல்வேறு பகுதிகளில் பனிப் பொழிவு அதிகரித்து வருகிறது.
புகழ் பெற்ற சுற்றுலா தலமான குல்மார்க் பகுதியில் புதிய பனிப் பொழிவில் நனைந்த சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியை தெரிவித்தனர். பனிப் பொழிவு, மழை காரணமாக மலைகளின் அரசியான மூசோரியில் எங்கும் பனிமூடியது
இதனிடையே ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலையைப் பனிமூடியதால் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. சில இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. ரஜோரி,பூஞ்ச், சோபியான், சோனாமார்க் சாலைகளும் மூடப்பட்டுள்ளன.
இதனால் அப்பகுதி நாட்டின் இதரப் பகுதிகளில் இருந்து துண்டிக்கப்பட்டுள்ளது. காஷ்மீரின்பெரும்பாலான பகுதிகளில் பனிமழை பெய்து வருகிறது.சில இடங்களில் பலத்த மழையும் கொட்டி வருகிறது.