ஐரோப்பிய நாடுகளில் கொரோனா முடிவுக்கு வர இருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
ஒமைக்கரான் பரவல் பேரிடராகப் பரவிய நிலையில் மார்ச் மாதத்திற்குள் ஐரோப்பிய நாடுகளில் 60 சதவீதம் பேரை பாதிக்கும் என்று கணிக்கப்படுகிறது.இதன் காரணமாக அது முடிவுக்கும் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக கொரோனா பாதிப்புகளால் உலகின் பல நாடுகள் துன்பமுறும் நிலையில் வெள்ளிரேகை போல ஒரு நம்பிக்கையை உலக சுகாதார அமைப்பு நடத்திய ஆய்வு தெரிவித்துள்ளது.
செய்தியாளர்களிடம் பேசிய உலக சுகாதார அமைப்பின் ஐரோப்பிய பிரிவுத் இயக்குனர் ஹான்ஸ் குலுகே Hans Kluge மார்ச் மாத இறுதிக்குப் பின்னர் கொரோனா விலகத் தொடங்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.மார்ச்சுக்குப் பிறகு சில வாரங்கள் அல்லது மாதங்களுக்குப் பிறகு உலகின் மற்ற பகுதிகளுக்கும் அது பரவி மடியத் தொடங்கும் என்றும் அவர் தெரிவித்தார்.