2021-ல் இந்தியாவில் இருந்து 16 கோடியே 90 லட்சம் ஸ்மார்ட்போன்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக counterpoint research சந்தை ஆய்வு நிறுவனத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2020 ஆம் ஆண்டில் 15 கோடியே 20 லட்சம் ஸ்மார்ட்போன்கள் ஏற்றுமதி செய்யப்பட்ட நிலையில், 2021ல் 11 சதவீதம் அதிக ஸ்மார்ட்போன்களை இந்தியா ஏற்றுமதி செய்துள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் 5ஜி ஸ்மார்ட் போன்களுக்கான தேவை அதிகரித்திருப்பதால் ஏற்றுமதியில் உயர்வு கண்டிருப்பதாகவும், இந்தியா ஏற்றுமதி செய்த ஸ்மார்ட் போன்களில் 5ஜி ஸ்மார்ட் போன்கள் 17 சதவீதம் பங்கு வகித்ததாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.