அமெரிக்காவில் கார் விபத்தில் ஹாலிவுட் நடிகரும் கலிபோர்னியா மாகாண முன்னாள் ஆளுநருமான அர்னால்டு உயிர்தப்பினார்.
லாஸ் ஏஞ்சலிஸ் நகரின் புறநகர்ப் பகுதியில் 4 கார்கள் ஒன்றன்பின் ஒன்றாக மோதி விபத்துக்குள்ளானது. அர்னால்டின் காருக்கு முன்னதாகச் சென்ற 2 கார்கள் நேருக்கு நேர் மோதின.
இதனால் பின்னால் வந்த வாகனங்களும் ஒன்றன்பின் ஒன்றாக வரிசையாக மோதி விபத்துக்குள்ளாகின. அப்போது அர்னால்டு சென்ற கார் மற்றொரு காரின் மீது மோதியது. சீட் பெல்ட் அணிந்திருந்தால் அர்னால்டு காயமின்றித் தப்பினார். இந்த விபத்தில் பெண் ஒருவருக்கு மட்டும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.