கானா-வில் தங்கச் சுரங்கத்துக்கு வெடிமருந்துகளை ஏற்றி சென்ற லாரி வெடித்து சிதறியதில் 13 பேர் உயிரிழந்தனர்.
கனடா நாட்டு நிறுவனம் ஒன்றால் நிர்வாகிக்கப்படும் சிரானோ தங்கச் சுரங்கத்துக்கு லாரி மூலம் வெடிமருந்து எடுத்து செல்லப்பட்டுள்ளது.
அபியேட் கிராமம் வழியாக சென்ற அந்த லாரி மீது இரு சக்கர வாகனம் ஒன்று மோதியதால் லாரி தீப்பற்றி எரிந்து உள்ளே இருந்த வெடிமருந்து வெடித்துச் சிதறியது.
இதனால் அப்பகுதியில் 66 அடி அகலத்துக்குப் பள்ளம் ஏற்பட்டது. அருகில் இருந்த கட்டிடங்களின் கதவுகள் மற்றும் கூரைகள் பிய்த்து கொண்டு சென்றன. இந்த கோர விபத்தில் 13 பேர் உயிரிழந்தனர்.