டோங்காவில் எரிமலை வெடிப்பு ஏற்பட்டதால், அங்கு இணையதள சேவை முழுவதும் முடங்கியதை அடுத்து அந்நாட்டிற்கு உதவ எலான் மஸ்க் முன்வந்துள்ளார்.
பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள டோங்கா தீவுகளில் சில நாட்களுக்கு முன் எரிமலை வெடித்து சிதறியதில், சுனாமி பாதிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக அங்கு கடலுக்கடியில் இணையதள சேவைக்காக நிறுவப்பட்டிருந்த அமைப்பு முற்றிலும் சேதமானது.
இந்நிலையில், தனக்கு சொந்தமான செயற்கைக்கோள் அடிப்படையில் இணைய சேவையை வழங்கும் ஸ்டார் லிங் மூலம் டோங்கா தீவுகளுக்கு இணையதள சேவை வழங்க எலான் மஸ்க் முன்வந்துள்ளார்.
இது குறித்து ட்விட்டரில் குறிப்பிட்ட அவர், ஸ்டார் லிங் திட்டத்தின் மூலம் இணையதள சேவையை பெற டோங்கா மக்கள் தங்களிடம் தெரிவிக்கலாம் என கூறியுள்ளார்.