மியாமியில் இருந்து லண்டன் நோக்கிச் சென்ற அமெரிக்க ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம், பயணி ஒருவர் முகக்கவசம் அணியாததால் நடுவானில் இருந்து மீண்டும் விமான நிலையத்திற்கே திரும்பியது.
நேற்று, 129 பயணிகள் மற்றும் 14 பணியாளர்களுடன் மியாமி விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட போயிங் 777 ரக விமானம், நடுவானில் சென்றுக் கொண்டிருந்த போது பயணி ஒருவர் முகக்கவசம் அணிய மறுத்துள்ளார். அமெரிக்க விமானங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டிருக்கும் நிலையில், அந்த பயணி முகக்கவசம் அணியாததால் விமானம் மீண்டும் மியாமி விமான நிலையத்திற்கு திரும்பியது.
அங்கு காத்திருந்த போலீசார், அந்த பயணியை வெளியேற்றினர். இது தொடர்பான விசாரணை நிலுவையில் உள்ளதாக அமெரிக்க ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.