திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகர் நாகார்ஜுனா தனது மனைவி அமலாவுடன் வந்து சுவாமி தரிசனம் செய்தார்.
நாகார்ஜுனாவுக்கு கோவில் வளாகத்தில் உள்ள ரங்கநாயக்கர் மண்டபத்தில் வேத மந்திரங்கள் முழங்க, தீர்த்தம் மற்றும் லட்டு பிரசாதத்தை தேவஸ்தான அதிகாரிகள் வழங்கினர். சுவாமி தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்த நாகார்ஜுனா, 2 ஆண்டுகளுக்கு பிறகு திருப்பதிக்கு வந்து தரிசனம் செய்தது மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்தார்.
பின்னர், அங்கிருந்த ரசிகர்களுடன் அவர் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.