பெரும்பாலானோர் கொரோனா தடுப்பூசி செலுத்தியதன் காரணமாக, பெருந்தொற்றின் 2வது அலையைக் காட்டிலும் 3வது அலையில் உயிரிழப்புகள் பெரிதும் குறைந்திருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூசன், நாட்டில் தினசரி கெரோனா தொற்று எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வந்த போதிலும், 72 சதவீத மக்கள் 2 டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டிருப்பதால், 2வது அலையில் ஏற்பட்டது போன்ற தீவிர பாதிப்புகள் இல்லை என்றார்.
எனினும் மகாராஷ்டிரா, தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருவது கவலை அளிக்கும் விதத்தில் இருப்பதாக கூறினார். தொற்று அதிகரிக்கும் 10 மாநிலங்களுக்கு மத்திய குழு அனுப்பி வைக்கப்பட்டு, நிலைமையை கண்காணித்து வருவதாகவும் ராஜேஷ் பூசன் தெரிவித்தார்.