அமெரிக்காவில் 5ஜி இணைய சேவை நடைமுறைக்கு வரவிருக்கும் நிலையில் இந்தியாவில் இருந்து அந்நாட்டிற்கு இயக்கப்படும் ஏர் இந்தியாவின் குறிப்பிட்ட விமானங்கள் தற்காலிகமாக இயங்காது என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
அமெரிக்காவின் 5ஜி இணைய சேவை தொடங்கப்பட இருந்த நிலையில் அந்த அலைக்கற்றைகளால் விமான சேவை பாதிக்கும் என்றும் விமானத்தின் அதிநவீன பாதுகாப்பு கருவிகளுக்கு சேதம் ஏற்படலாம் என்றும் விமான நிறுவனங்கள் குற்றஞ்சாட்டியிருந்தன.
இந்நிலையில், 5ஜி சேவை காரணமாக அமெரிக்காவிற்கான தங்கள் பயண சேவை புதன்கிழமை முதல் குறைக்கப்படலாம் அல்லது மாற்றியமைக்கப்படலாம் என ஏர் இந்தியா அறிவித்துள்ளது.
மேலும், 5ஜி சேவை விமானப் போக்குவரத்தில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் தங்களின் 12 லட்சம் பயணிகளை அது எதிர்மறையாக பாதிக்கும் என குறிப்பிட்ட அமெரிக்காவின் யுனைடட் ஏர்லைன்ஸ், குறைந்தது 15 ஆயிரம் விமான சேவைகளும், 40க்கும் மேற்பட்ட விமான நிலையங்களுக்கான சரக்கு போக்குவரத்து சேவை பாதிக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.