பண மோசடி விவகாரத்தில் சிக்கி ஏற்கனவே சிறையில் அடைக்கப்பட்டுள்ள பனங்காட்டுப் படை கட்சியின் ஹரி நாடாரை, நடிகைக்கு மிரட்டல் விடுத்த புகாரில், திருவான்மியூர் போலீசார் மீண்டும் கைது செய்துள்ளனர்.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி புகார் கூறிய நிலையில், சீமானுக்கு ஆதரவாக நடிகையை மிரட்டும் விதமாக ஹரிநாடார் பதில் வீடியோ வெளியிட்டதாக கூறப்படுகிறது.
இதனால், தற்கொலைக்கு முயன்ற விஜயலட்சுமி அளித்த புகாரில், சீமான், ஹரி நாடார் உள்ளிட்டோர் மீது திருவான்மியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.
இந்த நிலையில், பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஹரி நாடாரை கைது செய்ய அனுமதி கோரி திருவான்மியூர் போலீசார் பெங்களூரு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
மனு மீதான உத்தரவின் அடிப்படையில், பெங்களூரு சிறைக்கு சென்று ஹரிநாடாரை கைது செய்துள்ள திருவான்மியூர் போலீசார், அவரை சென்னைக்கு அழைத்து வந்து, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளனர்.