மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 499 காவலர்களுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.
அம்மாநிலத்தில் தற்போது 4 ஆயிரத்து 90 காவலர்கள் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இதுவரை மொத்தமாக 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவலர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டதாகவும் 500க்கும் மேற்பட்ட காவலர்கள் நோய்தொற்றுக்கு பலியாகி இருப்பதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.