உத்திரப்பிரதேச சட்டசபை தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் சமாஜ்வாதி கட்சித்தலைவர் முலாயம் சிங் யாதவ்-ன் மருமகள் அபர்னா யாதவ் பாஜகவில் இணைந்தார்.
உத்திரப்பிரதேச சட்டசபைக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ள நிலையில் முதற்கட்ட தேர்தல் வருகிற பிப்ரவரி மாதம் 10-ம் தேதி தொடங்க உள்ளது. இதில் ஆளும் பாஜக, காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சிகளிடையே மும்முனை போட்டி நிலவி வருகிறது. .
இந்த சூழலில், சமாஜ்வாதி கட்சித்தலைவர் முலாயம் சிங்கின் இளையமகனும், அகிலேஷ் யாதவின் சகோதரருமான பர்திக் யாதவ்-ன் மனைவி அபர்னா யாதவ் மாநில துணை முதலமைச்சர் கேசவ பிரசாத் மவுரியா முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். பின்னர் பேசிய அவர், மோடி தன்னை மிகவும் ஈர்த்த தலைவர் என கூறினார்.