நாட்டில் பட்டினி சாவு தொடர்பாக அறிக்கை அளிக்கும்படி மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பட்டினி சாவுகளை தடுக்கும் வகையில், சமுதாய உணவகங்களை அமைக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட பொது நல மனு, தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால், எந்த மாநிலமும் பட்டினி சாவு குறித்து தகவல் அளிக்கவில்லை என்றும், தெரிவித்தார்.
இதையடுத்து சமுதாய உணவகம் தொடர்பாக மாநில அரசுகளின் கருத்துகளை கேட்டறிந்து, மத்திய அரசு திட்டம் ஒன்றை வகுத்து, அதை செயல்படுத்தும் பொறுப்பை மாநில அரசுகளிடம் ஒப்படைக்க வேண்டும், என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும், பட்டினி சாவு தொடர்பாக மத்திய அரசு அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், இந்த வழக்கின் விசாரணையை 3 வாரத்திற்கு ஒத்திவைத்தது.