பெட்ரோலியப் பொருட்கள் வாங்குவதற்காக இலங்கை அரசிற்கு 3 ஆயிரத்து 729 கோடி ரூபாய் கடனுதவி வழங்க இந்தியா முடிவு செய்துள்ளது.
கடந்த வாரம் இலங்கையின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவது தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், இலங்கை நிதியமைச்சர் பஷில் ராஜபக்சே இடையே காணொலி மூலம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
இதனை தொடர்ந்து, பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு பெட்ரோலிய பொருட்கள் வாங்க இந்தியா கடனுதவி அளிக்க முன்வந்துள்ளது.
ஏற்கெனவே இம்மாத தொடக்கத்தில் அந்நிய செலாவணிக்கான நிவாரணமாக இலங்கைக்கு இந்தியா, 6 ஆயிரத்து 711 கோடி ரூபாய் நிதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.