சென்னை அருகே நாயைத் தாக்கியதைத் தட்டிக்கேட்டதற்காக முதியவர் ஒருவரை இளைஞன் ஒருவன் தாக்கியதாகக் கூறப்படும் சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
சிறுசேரியைச் சேர்ந்த மஹாவீர் ஜெயின் என்ற அந்த முதியவர் தாம் வசிக்கும் தெருவில் சுற்றித் திரியும் நாய்களுக்கு உணவு அளிப்பதை வழக்கமாக வைத்துள்ளார்.
இரு தினங்களுக்கு முன் அவர் வசிக்கும் குடியிருப்பைச் சேர்ந்த ராஜேஷ் என்பவன், தெருநாய்களை கட்டையால் தாக்கினான் என்று கூறப்படுகிறது. அதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த மஹாவீர் ஜெயின் ராஜேஷைத் தட்டிக்கேட்டுள்ளார்.
அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் நாயை அடிக்கப் பயன்படுத்திய கட்டையாலேயே மஹாவீர் ஜெயினையும் அவரது நண்பரையும் ராஜேஷ் தாக்கினான் என்று கூறப்படும் நிலையில், வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.