தெற்கு பசிபிக் கடல் பகுதியில் உள்ள தீவு நாடுகளில் ஒன்றான Tonga-வில் கடந்த 15-ஆம் தேதி கடலுக்கு அடியில் ஏற்பட்ட எரிமலை மற்றும் அதனால் பல ஆயிரம் கிலோ மீட்டர் வரை தொட்ட சுனாமி, புவியியல் விஞ்ஞானிகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
21-ஆம் நூற்றாண்டின் மிக சக்தி வாய்ந்த எரிமலை எனக் கருதப்படும் இந்த இயற்கை சீற்றம், சென்ற மாதம் முதலே லேசாக ஆரம்பித்ததாகவும், பிறகு இந்த மாதம் 13-ஆம் தேதி முதல் வீரியம் பெற்று 15ஆம் தேதி உக்கிரம் அடைந்த நிலையில், எதனால் திடீரென உக்கிரம் அடைந்தது என்பது குறித்து விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகின்றனர்.
அதேபோல சுமார் 8 ஆயிரம் கிலோமீட்டருக்கு அப்பால் உள்ள வட அமெரிக்கா மற்றும் ஜப்பானை தொடும் அளவுக்கு சுனாமியின் தாக்கம் ஏற்பட என்ன காரணம் என்பது குறித்தும் ஆராய்ந்து வருகின்றனர்.