டோங்கா தீவுகளை சுனாமி தாக்கியதால் ஏற்பட்ட பாதிப்புகளை கணக்கிட ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாட்டு அரசுகள் கண்காணிப்பு விமானங்களை அனுப்பி உள்ளன.
சனிக்கிழமை, பசிபிக் பெருங்கடலுக்கடியில் உள்ள எரிமலை வெடித்து சிதறியதால் ஏற்பட்ட சுனாமி பேரலைகள் டோங்கா தீவுகளைத் தாக்கின. இதனால் மின்சாரம், தொலைபேசி இணைப்புகள் மற்றும் இணைய சேவைகள் துண்டிக்கப்பட்டன.
மின் இணைப்புகள், சாலைகள் போன்ற உட்கட்டமைப்புகளுக்கு ஏற்பட்ட சேதங்களைக் கணக்கிட ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் இருந்து கண்காணிப்பு விமானங்கள் புறப்பட்டன.