கேரளத்தின் கோட்டயம் மாவட்டத்தில் பெயிண்டருக்கு லாட்டரியில் 12 கோடி ரூபாய் பரிசு கிடைத்துள்ளது.
குடையாம்பாடி என்னும் ஊரைச் சேர்ந்த தொழிலாளி சதானந்தன் கேரள அரசின் கிறிஸ்துமஸ் புத்தாண்டு லாட்டரிச் சீட்டை 300 ரூபாய்க்கு வாங்கியுள்ளார்.
குலுக்கலில் அவர் வாங்கிய பரிசுச் சீட்டு எண்ணுக்கு முதல் பரிசாக 12 கோடி ரூபாய் கிடைத்தது செய்தியில் தெரியவந்தது. இதையடுத்து அந்தப் பரிசுச் சீட்டை அவர் கோட்டயத்தில் உள்ள பாரத ஸ்டேட் வங்கிக் கிளையில் ஒப்படைத்தார்.
இந்தப் பரிசுத் தொகையைக் கொண்டு தங்கள் பிள்ளைகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தப்போவதாக சதானந்தன் தெரிவித்துள்ளார்.