பிரபல மலையாள நடிகர் மம்மூட்டிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்டோருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகிறது.
இந்நிலையில், 'சிபிஐ-5' என தற்காலிகமாக பெயரிடப்பட்ட படத்தின் படப்பிடிப்பின் போது மம்மூட்டிக்கு ஜலதோஷம், தொண்டை வலி ஏற்பட்ட நிலையில் நடத்தப்பட்ட பரிசோதனையில் தொற்று பாதிப்பு உறுதிசெய்யப்பட்டது.
மேலும், அப்படத்தின் படப்பிடிப்பு 2 வாரங்களுக்கு தற்காலிகமாக நிறுத்தப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றிய போதும், தனக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட மம்மூட்டி, மிதமான காய்ச்சல் மட்டுமே உள்ளதால் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டதாக தெரிவித்தார்.