திருப்பதி ஏழுமலையான் கோவிலில் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தன் கணவருடன் சாமி தரிசனம் செய்தார்.
திருமலைக்கு வந்த தமிழிசை சவுந்தரராஜனுக்கு தேவஸ்தன அதிகாரிகள் வரவேற்பு அளித்தனர். ரங்க நாயக்கர் மண்டபம் உள்ளிட்ட பிரகாரங்கள் சென்று தன் கணவருடன் சாமி தரிசனம் செய்தார்.
தமிழிசை சவுந்தரராஜனுக்கு லட்டு பிரசாதங்களை தேவஸ்தான அதிகாரிகள் வழங்கினர். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், மாநிலங்களுக்கு ஏற்ப ஊரடங்கு விதிகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், மக்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.