பிரேசில் நாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் 122 ஆண்டுகள் பழமையான பங்களா தரைமட்டமானது.
தென்கிழக்கு நகரமான ஓரோ பெட்ரோ என்ற இடத்தில் உள்ள மலையில் நேற்று திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. அப்போது பெரும் வெடிப்புச் சத்தம் எழுந்ததால் மக்கள் அச்சத்தில் அலறினர்.
இதனைத் தொடர்ந்து அடுத்த சில நொடிகளில் பெரும் சப்தத்துடன் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிகழ்வில் மலையடிவாரத்தில் கட்டப்பட்டிருந்த பிரேசிலியா பங்களா தரைமட்டமானது.
யுனெஸ்கோ சார்பில் ஓரே பெட்ரோ நகரம் பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அங்கு ஏற்பட்ட நிலச்சரிவில் தரைமட்டமான கட்டடம் கடந்த 1890ம் ஆண்டு கட்டப்பட்டது.