நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள் நாளை முதல் 31ஆம் தேதி வரை மூடப்படுவதாக அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் அறிவித்துள்ளார்.
போபாலில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடான ஆலோசனைக்கு பின் பேசிய அவர், நாளை முதல் பள்ளிகள் மூடப்பட்டு 1 முதல் 12ம் ஆம் வகுப்பு வரையில் அனைத்து மாணவர்களுக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்படும் என தெரிவித்தார்.
மேலும், மறு உத்தரவு வரும் வரை அரசியல், மதம் சார்ந்த கூட்டங்கள் நடத்த தடை விதிக்கப்படுவதாகவும், 50 சதவீத இருக்கை வசதிகளுடன் உள் அரங்குகளில் நிகழ்ச்சிகளை நடத்திக் கொள்ளலாம் என்றும் கூறினார்.