ஏமன் நாட்டின் எண்ணெய் வளமிக்க மரீப் நகர், ஹவுதி கிளர்ச்சியாளர்கள் பிடியில் சென்று விடாமல் தடுக்க அந்நாட்டு ராணுவத்தினரும், அவர்களுக்கு உதவியாக ஐக்கிய அரபு அமீரகத்தின் ராணுவத்தினரும் இணைந்து போராடி வருகின்றனர்.
2015ம் ஆண்டு, சவுதி அரேபியா ஆதரவுடன் ஏமனில் பதவியேற்ற அரசு, ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்களால் கவிழ்க்கப்பட்டது. அதை தொடர்ந்து 7 ஆண்டுகளாக நடைபெறும் சண்டையில் மரீப் நகரை சுற்றியுள்ள பல்வேறு மாவட்டங்களை ஹவுதி அமைப்பினர் கைப்பற்றினர்.
ஹைட்ரோ கார்பன் மற்றும் எண்ணெய் வளம் நிறைந்த மரீப் நகரை பாதுகாக்க சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப்படைகள் கடுமையாகப் போராடி வருகின்றன.