பிலிப்பைன்ஸ் கடற்படைக்கு இரண்டாயிரத்து 775 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கப்பல் எதிர்ப்பு ஏவுகணை வாங்குவதற்கு இந்தியாவின் பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் நிறுவனத்துக்கு ஆர்டர் கிடைத்துள்ளது.
ரஷ்யத் தொழில்நுட்பத்தில் இந்தியாவில் பிரம்மோஸ் ஏவுகணைகளைத் தயாரிப்பதற்கு பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் என்கிற பெயரில் இருநாடுகளின் கூட்டு நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் இந்தியாவின் முப்படைகளுக்கும் தேவையான ஏவுகணைகளைத் தயாரித்துக் கொடுப்பதுடன் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்வதை நோக்கமாகக் கொண்டது.
இந்நிலையில் பிலிப்பைன்ஸ் கடற்படைக்காக அந்நாட்டுத் தேசியப் பாதுகாப்புத் துறை இரண்டாயிரத்து 775 கோடி ரூபாய் மதிப்பிலான ஆர்டரை வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.