கொரோனா சூழலில் இந்த ஆண்டில் அனைத்துப் பள்ளிப் பேருந்துகளுக்கும் வாகன வரி செலுத்துவதில் இருந்து விலக்களிக்க மகாராஷ்டிர அமைச்சரவை முடிவெடுத்துள்ளது.
பெரும்பாலும் பள்ளிகள் திறக்கப்படாமல் உள்ளதைக் கருத்திற்கொண்டு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. பத்துக்கும் குறைவானோர் பணியாற்றும் கடைகள், வணிக நிறுவனங்களிலும் மராத்தி மொழியில் பெயர்ப் பலகை வைக்க வகை செய்யும் சட்டத் திருத்தத்துக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இதன்படி ஆங்கிலத்திலோ, பிற மொழிகளிலோ உள்ளதைவிட மராத்தி எழுத்துக்கள் பெரிதாக இருக்க வேண்டும் என்றும் சட்டத் திருத்தத்தில் குறிப்பிட்டுள்ளது.