சென்னையில் செயின், செல்போன் வழிப்பறி போன்ற குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களை ஒடுக்க புதிய ஆப்ரேசன் தொடங்கியிருப்பதாக மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னை முழுவதும் கண்காணிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
முன்னதாக நடைபெற்ற நிகழ்ச்சியில் காவல் துறையில் பணிபுரிவோரின் குடும்பத்தினருக்கு பல்வேறு தனியார் நிறுவனங்களின் மூலம் வேலை வாய்ப்புகள் ஏற்படுத்தி அதற்கான பணி நியமன ஆணையை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் இன்று வழங்கினார்.