பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவால் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் நடிகர் சித்தார்த் கருத்து கூறிய விவகாரம் குறித்து சென்னை சைபர் கிரைம் போலீசார் விசாரணையை துவங்கியுள்ளனர்.
பிரதமர் மோடியின் பஞ்சாப் பயணத்தின்போது ஏற்பட்ட பாதுகாப்பு குளறுபடிக்கு கண்டனம் தெரிவித்திருந்த சாய்னா நேவாலின் ட்விட்டர் பதிவுக்கு, நடிகர் சித்தார்த் கூறிய பதில் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. சித்தார்த்தின் சர்ச்சை கருத்து குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி கேட்டுக் கொண்டிருந்தது.
அதன் அடிப்படையில் தமிழக டி.ஜி.பி. உத்தரவின் பேரில் சென்னை சைபர் கிரைம் போலீசார் விசாரணையை துவங்கியுள்ளனர். புகார் தொடர்பான விபரங்கள், ட்விட்டர் பதிவுகளை சட்ட வல்லுநர்கள் ஆய்வுக்கு அனுப்பியுள்ள போலீசார், அந்த பரிந்துரை அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.