கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், அனைத்து மாநிலங்களும் ஆக்சிஜன் கையிருப்பை உறுதிபடுத்த வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், குறைந்தபட்சம் 48 மணி நேரத்திற்கு மருத்துவ சேவைக்கான ஆக்சிஜன் கையிருப்பு வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மருத்துவமனைகளில் திரவ நிலை ஆக்சிஜன் டேங்குகள் நிரப்பப்பட்டிருக்க வேண்டும் என்றும், அதற்கு தடையற்ற விநியோகத்திற்கு தகுந்த ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்றும், நோயாளிகளுக்கு ஆக்சிஜன் சிலிண்டர்கள் தடையின்றி கிடைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.