சுவாமி விவேகானந்தரின் கனவுகளை நனவாக்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் எனப் பிரதமர் நரேந்திர மோடி, அழைப்பு விடுத்துள்ளார்.
சுவாமி விவேகானந்தரின் 160ஆவது பிறந்த நாளையொட்டி டுவிட்டரில் பிரதமர் விடுத்துள்ள செய்தியில், அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.
நாட்டின் மறுமலர்ச்சிக்காக விவேகானந்தர் வாழ்வை அர்ப்பணித்துக் கொண்டதையும், நாட்டைக் கட்டமைக்கும் பணியில் பங்கேற்க இளைஞர்களைத் தூண்டியதையும் நினைவுகூர்ந்துள்ளார்.
நாட்டுக்காக விவேகானந்தர் கண்ட கனவுகளை நனவாக்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம் எனக் குறிப்பிட்டுள்ளார்.