குஜராத் அரசு கொரோனா ஊரடங்கில் பல்வேறு கெடுபிடிகளை அறிவித்துள்ளது.
திருமண, கலாசார, அரசியல், மற்றும் மதம் சார்ந்த பொது நிகழ்வுகளில் கலந்து கொள்ள 400 பேர் அனுமதிக்கப்பட்டு இருந்ததை 150 ஆக குறைத்துள்ளது.
மூடிய அரங்கில் நடக்கும் நிகழ்வுகளில் 50 சதவீதம் பேர் மட்டும் கலந்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வரும் 22-ஆம் தேதி காலை 6 மணி வரை அனைத்து கட்டுப்பாடுகளும் அமலில் இருக்குமென அரசு தெரிவித்துள்ளது.