உத்தரப்பிரதேசத்தில் பாஜகவில் இருந்து 13 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்து, சமாஜ்வாடி கட்சியில் இணைவார்கள் என்று தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே அமைச்சர் சுவாமி பிரசாத் மவுரியா மற்றும் 4 எம்எல்ஏக்கள் பாஜகவில் இருந்து விலகியுள்ள சூழலில், மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய சரத்பவார் இதனை கூறினார்.
உத்தரப்பிரதேச சட்டமன்ற தேர்தலில் சமாஜ்வாதி மற்றும் சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தங்களது கட்சி போட்டியிடும் என்று தெரிவித்தார்.
கோவாவில் கூட்டணி அமைப்பது தொடர்பாக காங்கிரஸ் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் சரத்பவார் கூறினார்.