ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் விளம்பரதாரராக இருந்த சீனாவைச் சேர்ந்த விவோ மாற்றப்பட்டு டாடா குழுமம் புதிய விளம்பரதாரராக அறிவிக்கப்பட்டுள்ளது.
விவோ நிறுவனம் விளம்பரதாரராக 2018ஆம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டு வரை 2 ஆயிரத்து 200 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தமானது. இந்நிலையில், இந்திய - சீன வீரர்களுக்கிடையே எல்லையில் நடந்த மோதல் காரணமாக, விவோ நிறுவனத்திற்கு எதிர்ப்பு எழுந்த நிலையில், 2020ஆம் ஆண்டு தொடரில் மட்டும் 'ட்ரீம் 11' விளம்பரதாரராக இருந்தது.
எனினும் கடந்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கு விவோ விளம்பரதாரராக இருந்த நிலையில், ஒப்பந்த காலம் முடிந்ததால், டாடா குழுமம் புதிய விளம்பரதாரராக அறிவிக்கப்பட்டுள்ளது. டாடா குழுமம் 2023ஆம் ஆண்டு வரை விளம்பரதாரராக இருக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.