வோடபோன் - ஐடியா நிறுவனத்தின் 35 புள்ளி 8 சதவீத பங்குகளை மத்திய அரசுக்கு வழங்க அந்நிறுவனத்தின் இயக்குநர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர்.
ஸ்பெக்ட்ரம் கட்டணம் மற்றும் மத்திய அரசுக்கு செலுத்த வேண்டிய ஏஜிஆர் நிலுவைத் தொகையை தொலைத் தொடர்பு நிறுவனங்கள் செலுத்த 4 ஆண்டு கால அவகாசத்தை மத்திய அரசு கடந்தாண்டு வழங்கியது. இக்காலகட்டத்தில் வட்டி கணக்கீடு தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
எனவே, வட்டியின் ஒரு பகுதியை பங்குகளாக மாற்ற வேண்டும் என நிறுவனங்கள் விரும்பினால், அதற்கு அரசு ஒப்புதல் அளிக்கும் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், ஸ்பெக்ட்ரம் ஏலத் தவணைகள் தொடர்பான வட்டியையும், அரசுக்கு செலுத்த தொகையையும் பங்குகளாக மாற்ற வோடபோன் - ஐடியா நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது. இதனையடுத்து, வோடபோன் குழுமத்தின் பங்கு 28 புள்ளி 5 சதவீதமாகவும், ஆதித்யா பிர்லா குழும பங்கு 17புள்ளி 8 சதவீதமாகவும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.