மத்திய பிரதேசத்தில் மீசை மற்றும் தலை முடியை முறையாக வெட்டிக் கொள்ளாததற்காக போலீஸ்காரருக்கு பிறப்பிக்கப்பட்ட சஸ்பெண்ட் உத்தரவு ரத்துசெய்யப்பட்டது.
போபாலில் சிறப்பு டி.ஜி.க்கு டிரைவராக பணிபுரிந்த காவலர் ராகேஷ் ராணா, மீசை மீது கொண்ட அளவற்ற காதலால் எதிரே வரும் அதிகாரியும் மிரளும் அளவுக்கு வளர்த்துக் கொண்டதாக கூறப்படுகிறது.
முறையாக தலை முடி மற்றும் மீசையை மழித்துக் கொள்ளுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியும் ராணா மறுத்ததாக கூறப்படுகிறது. ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டதாக ராகேஷ் ராணாவை சஸ்பெண்ட் செய்து டிஐஜி உத்தரவிட்டார்.
ஆனால், அரசு குடும்பத்தை சேர்ந்த தனக்கு மீசை ஒரு கவுரவம் என ராணா கூறியிருந்தார். இந்நிலையில், சஸ்பெண்ட் செய்தது டிஐஜியின் அதிகார வரம்புக்கு உட்பட்டது அல்ல எனக் கூறியுள்ள அம்மாநில டிஜிபி, சஸ்பெண்ட்டை ரத்து செய்து உடனடியாக பணியில் அமர்த்தி உத்தரவிட்டார்.