பொங்கல் பண்டிகைக்கு இன்னும் ஒரு சில நாட்களே உள்ள நிலையில், சென்னை கோயம்பேடு சந்தைக்கு கரும்பு மற்றும் மஞ்சள் வரத்து அதிகரித்துள்ளது.
கோயம்பேடு சந்தைக்கு ஒரே நாளில் 25 லாரிகள் மூலம் கரும்புகள் வந்து இறங்கியுள்ள நிலையில், 20 கரும்புகள் கொண்ட ஒரு கட்டு, 350 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இந்நிலையில், மதுரை மேலூர் உள்ளிட்ட ஊர்களில் இருந்து, ஓரிரு நாட்களில் கரும்பு வர உள்ளதால் விலை மேலும் குறைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
அதே போல கோயம்பேடு சந்தைக்கு ஒரே நாளில் 10 லாரிகளில் மஞ்சள் வந்து இறங்கியுள்ள நிலையில், ஒரு கொத்து மஞ்சள் 100 ரூபாய்க்கு விற்பனையாகிறது.