கொரோனா தொற்றுப் பாதித்து வீட்டுத் தனிமையில் இருப்பவர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பில், தனிக் கழிவறையுடன் கூடிய காற்றோட்டம் உள்ள தனியறையில் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் வீட்டில் உள்ளோர் அவர்களது அறைக்குள் நுழையக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், வீட்டுத் தனிமையில் உள்ளோர் சத்தான உணவுகளை சாப்பிட வேண்டும் என்றும் மற்றவர்களிடம் தொடர்பு இல்லாதவாறு உணவை பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பிறருடன் தொடர்பு கொள்ள நேரிட்டால் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்திய மாநகராட்சி, போதிய ஓய்வும், உறக்கமும் அவசியம் என குறிப்பிட்டுள்ளது.
மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் ஆக்சிஜன் அளவை கண்காணிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.