ஹரியானா மாநிலம் குருகிராமில் பச்சிளம் குழந்தைகளை கடத்தும் கும்பலைச் சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
டாக்சியில் அமர்ந்து குழந்தைகளைக் கடத்துவதைப் பற்றி அந்த மூவரும் பேசியதைக் கேட்ட டாக்சி ஓட்டுனர் அவர்களை நேராக காவல் நிலையத்துக்கு கொண்டு வந்து போலீசாரிடம் ஒப்படைத்துள்ளார்.
பல்வேறு மாநிலங்களில் செயல்படும் குழந்தை கடத்தல் கும்பலைச் சேர்ந்த இந்த மூவரும் டெல்லியில் இருந்து 2 பச்சிளம் பெண் குழந்தைகளைக் கடத்தி வந்து ராஜஸ்தான் மாநிலம் ஆல்வாரில் 3 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்ய திட்டமிட்டதாகப் போலீசார் தெரிவித்தனர்.
டெல்லியில் இருந்து 2 குழந்தைகளைக் கடத்திக் கொண்டு செல்லும் வழியில் டாக்சியில் டாக்சி ஓட்டுனர் உதவியால் சிக்கியுள்ளனர். கடத்தப்பட்ட குழந்தைகளும் மீட்கப்பட்டன.