இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளதாக அந்நாட்டு அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கொழும்பு நகரில் செய்தியாளர்களிடம் பேசிய எரிசக்தி துறை அமைச்சர் உதய கம்மன்பில,இலங்கையில் அந்நியச் செலாவணி கையிருப்பை விட கடன் தொகை அதிகமாக உள்ளது என்றார்.
அந்நிய செலாவணி வெளியில் சென்று விடக்கூடாது என்பதால், வெளிநாட்டிலிருந்து தானிய இறக்குமதி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த மாதம் மூன்றாவது வாரத்தில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என அவர் கூறினார். எரிபொருள் இறக்குமதிக்குத் தேவையான வெளிநாட்டு கரன்சியை செலுத்த வேண்டுமென மத்திய வங்கியை அவர் வலியுறுத்தி உள்ளார்.
எரிபொருளை கொள்முதல் செய்ய முடியாத நிலை இருப்பதால், வரும் நாட்களில் மின்வெட்டு ஏற்படும் என்றும், மக்கள் தயாராக இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.