புதுச்சேரியில் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்படும் பட்சத்தில் பள்ளிகளை மூடுவது தொடர்பாக ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
வானர பேட்டை பகுதியில் உள்ள அமலோற்பவம் மேல்நிலைப்பள்ளியில் மாணவ - மாணவிகளுக்கு தடுப்பூசி செலுத்தும் முகாமை துவங்கி வைத்த பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் இதனை தெரிவித்தார்.
மேலும் கொரோனா மற்றும் ஒமைக்ரான் வைரஸ்களால் ஏற்படும் உயிரிழப்பை தடுப்பது தடுப்பூசி மட்டுமே என்பதால் அனைவரும் அதை உணர்ந்து கட்டாயம் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.