பாகிஸ்தான் ஆதரவு ஜெய்சே முகமது தீவிரவாத இயக்கம் நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ். தலைமையகத்தை குண்டு வைத்து தகர்க்க திட்டமிட்டிருப்பதாக தகவல் வந்ததையடுத்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். வெடிகுண்டு நிபுணர்களும் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளனர். ஆர்.எஸ்.எஸ் தலைமையகம் உள்ள பகுதியில் டிரோன்கள் பறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒரு மாதம் முன்பு நாக்பூருக்கு வந்த காஷ்மீர் தீவிரவாதிகள் சிலர் நாக்பூரில் இரண்டு மூன்று நாட்களுக்குத் தங்கியிருந்ததாக காவல்துறை ஆணையர் தெரிவித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ். தலைமையகம் மற்றும் மக்கள் அதிகளவில் கூடும் இடங்களில் குண்டு வெடிப்பு ஏற்படுத்த தீவிரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக உளவுத்துறையினர் எச்சரித்துள்ளனர்