கிழக்கு பிரேசிலில் கொட்டித் தீர்த்த கனமழையால் கழுத்து அளவுக்கு தேங்கிய நீரில் மக்கள் தத்தளித்து வருகின்றனர்.
Maranhao மாகாணத்தில் கொட்டிய தொடர் மழையால் குடியிருப்புகள் நீரில் மூழ்கின. குடியிருப்புகளை சுற்றி கழுத்து அளவுக்கு தண்ணீர் தேங்கியதால் தாமாக வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர்.
அதிகம் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் சிக்கியவர்களை படகுகள் மூலம் மீட்பு படையினர் மீட்டு வருகின்றனர். 800-க்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்து முகாம்வாசிகளாக மாறி உள்ளனர்.